Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

எப்போது நெஞ்ச மினிய வுயிர்தன்னிற்
றப்பாது பூண்டு தனிநிற்கு – மப்போது
காம மனைததிற் கழிந்தநசை யோகியெனு
நாம முடையனா நன்று.          6.16

நெஞ்சம்

மனமானது

இனிய உயிர் தன்னில்

இனி தான ஆத்மஸ்வரூபத்தில்

தப்பாது பூண்டு

தப்பமுடியாதபடி ஈடுபடுத்தப்பெற்று

எப்போது

எந்த சமயத்தில்

தனி நிற்கும்

அதிலேயே நிலைநிற்குமோ

அப்போது

அந்த சமயத்தில்

காமம் அனைத்தில் கழிந்த நசை யோகி எனும்

எல்லா ப்ராக்ருத காமங்களினின்றும் ஆசை நீங்கிய யோகி (யுக்தன் ) என்னும்

நாமம்

பெயரை

நன்கு உடையனாம்

நன்கு உடையவனாகிறான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top