Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆன்றுணர்ந்த வந்தணனா வததிநாய் நீசனெனத் 
தோன்றுடலந் தோறுந் துவக்கமைந்தங் – கேன்றவுயி
ரொக்க நிகழு முணர்வோ ரெனமறையிற்
றக்க வறிவுடையோர் தாம்.       5.17

மறையில் தக்க அறிவுடையோர் தாம்

வேதத்திற் சொல்லப்பட்ட (ஆத்மாவைப்பற்றிய) உண்மையறிவுடையவர்கள்.

ஆன்று உணர்ந்த அந்தணன்

அடக்கத்தோடு கூடிய கல்வியை உடைய அந்தணன் (அவையற்ற அந்தணன்)

பசு

அத்தி

துதிக்கையையுடைய யானை

நாய்

நாய்

நீசன்

( அதைத் தின்னும் ) சண்டாளன்

என

என்று இப்படி வெவ்வேறு பட்டு

தோன்று உடலம் தோறும்

காட்சியளிக்கும் உடலகள் தோறும்

துவக்கு அமைந்து

வேறுபாட்டை உடையவையாய்

அங்கு

அவ்வுடல்களில்

ஏன்ற உயிர்

பொருந்தி நிற்கும் ஆத்மஸ்வரூபங்கள்

ஒக்க நிகழும் என உணர்வோர்

ஒருபடிப்பட்டவை என அறிபவர்கள் ஆவர். 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top