Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஏது கருமமாங் கேதுணர்வா மென்றறியார் 
மூதுணர்வி னின்றாரு மோகிப்பர் – மீதுனக்கிங் 
கக்கருமந் தன்னை யமர்ந்துரைக்கே னாங்கதனை 
மிக்குணர்ந்தே தீங்ககல்வை விட்டு.      4.16

மூது உணர்வின் நின்றாரும்

முன்னோர்களான அறிவாளிகளும்

ஏது கருமம்

(முமுக்ஷவினால் அனுஷ்டிக்கத்தக்க) கருமம் எது

ஆங்கு உணர்வு ஏதாம்

அக்கர்மத்தில் அடங்கிய அறிவு எதுவாகும்

அறியார் மோகிப்பர்

அறியாமல் மயங்குவர்

இங்கு உனக்கு

இப்போது இவ்விடத்திலேயே உனக்கு

மீது அக்கருமம் தன்னை

(ஞானத்தோடு கூடியிருக்கையால்) சிறந்து நிற்கும் அக்கருமத்தையே

அமர்ந்து உரைக்கேன்

நன்றாக உபதேசிக்கப்போகிறேன்

ஆங்கு அதனை மிக்கு உணர்ந்தே

அத்தகைய கர்மத்தை நன்றாக அறிந்து (அநுஷ்டித்து)

தீங்கு விட்டு அகல்வை

தீயதான ஸம்ஸாரக்கட்டுதனை கைவிட்டு அகன்றிடுவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top