Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

யானியலா திங்கொழியி லென்வழியைப் பின்செல்வர்
மானிடர்மற் றிவ்வுலக மாயுமாற் – றானிலைசேர்
நன்மரபு தான்கலக்கி நானே யிவர்தம்மைப்
புன்மையினி லுய்த்தேனாய்ப் போம்.      3.20

இங்கு

இவ்வுலகில்

யான் இயலாதொழியில்

நான் கர்மம் செய்யாவிடில்

மானிடர்

ஸாமாந்ய மனிதர்

என் வழியைப் பின் செல்வர்

என் நடத்தையைப் பின்பற்றுவர்

மற்று

அதற்குமேலே

இவ்வுலகம்

இவ்வுலகினர்

மாயுமால் அழிவர் அந்தோ!

மாயுமால் அழிவர் அந்தோ!

நானே

(நல்வழிகாட்டவேண்டிய) நானே

இவர் தம்மை

இவர்களை

தான் நிலைசேர் நன் மரபு தான் கலக்கி

தமக்குரிய நிலையில் நிற்கவேண்டிய நல்வழியைச் கலங்கச்செய்து

புன்மையினில் உய்த்தேனாய்போம்

எப்போதும் உய்வற்றவர்களாயிருக்கும் தாழ்நிலையை அடையச்செய்தவனாவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top