Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சாலவெதி ரற்றித் தலத்தரசில் வீற்றிருப்பு
மேலமரர் நாயகமு மேவிடினு – ஞாலத்தென்
றொல்லைப் புலனுலர்த்துஞ் சோகத்தைப் போக்குவதோ
ரெல்லைப் பொருள் காணேன் யான்.   2.8

சால எதிர் அற்று

எதிரிகள் அடியோடு இல்லாமல்

இத்தலத்து அரசில் வீற்றிருப்பும்

இப்புவியில் அரசனாக வீற்றிருப்பதையும்

மேல் அமரர் நாயகமும்

மேலான அமரர்க்குத் தலைமையையும்

மேவிடினும்

அடைந்தாலும்

ஞாலத்து

இவ்வுலகில்

என் தொல்லை புலன் உலர்த்தும் சோகத்தை

என் பழமையான இந்திரியங்களை வற்றச்செய்யும் வருத்தத்தை

போக்குவது

போக்குவதான

ஓர் எல்லைப்பொருள்

ஒரு சிறந்த வழியை

யான் காணேன்

காணமாட்டேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top