Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முயன்றிடினுந் தன்புலன்கண் மொய்ம்பான் மனத்தை
யியன்று நிலைதொலைக்கு மென்பா – னயந்தே
யவையென்றுங் காக்கி லவன்கண் வசமா
நவையின்றி நிற்குமதி நன்கு.          2.56

முயன்றிடினும்

ஆத்ம ஸ்வரூபத்தைக்காண மிகவும் முயற்சிசெய்தபோதிலும்

தன் புலன்கள்

இவனுடைய இந்திரியங்கள்

மொய்ம்பால்

தம் வலிமையாலே

மனத்தை

நெஞ்சை

இயன்று

பலாத்கரித்து

நிலைதொலைக்கும்

ஆத்மாவில் நிலைநில்லாதபடி செய்யும்

என்பால் நயந்த

என்னிடம் நெஞ்சை ஈடுபடுத்தி

அவை என்றும் காக்கில்

அவ்விந்திரியங்களை எப்போதும் நியமிக்கில்

அவன்கண் வசமாம்

அவ்விந்திரியங்கள் அந்த ஜீவனுக்கு வசப்பட்டு விடும்

மதி நவையின்றி நன்கு நிற்கும்

அவனுடைய அறிவு மீள்வதாகிற குற்றமில்லாமல் நன்கு நிலைநிற்கும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top