Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சொட்டை மணவாளத் தூய்முனிவன் சொற்செய்த
சட்ட மருவுந் தமிழ்ப்பாவாற் – கட்டெழில்சீர்க்
கோமா னருள்கீதை கூறும் பொருளுணர்வார்
சீமா னடிசேர்வர் சென்று.            18.78G

சொட்டை மணவாளத் தூய்முனிவன் சொற்செய்த

சொட்டைக்குலம் எனப்படும் ஸடமர்ஷண கோத்திரத்தில் உதித்த அழகிய மணவாளச்சீயர் இயற்றிய

சட்டம் மருவும் தமிழ்ப்பாவால்

இலக்கண விதிகளுக்கு உட்பட்ட தமிழ்ப்பாட்டால்

கட்டு எழில் சீர் கோமான அருள் கீதை கூறும் பொருள் உணர்வார்

முழுவதும் அழகு நிறைந்த கண்ணனருளிய கீதை சொல்லும் பொருளை அறிபவர்கள்

சீமானடி

அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை

சென்று

அர்ச்சிராதிகதியாலே சென்று

சேர்வர்

சேர்வார்கள்

ஸுதர்சனர் என அழைக்கப்படும் ஸ்ரீ. உ. வே. க்ருஷ்ண ஸ்வாமி ஐயங்கார்
எழுதிய பதவுரையுடன் கூடிய பகவத்கீதை வெண்பா முற்றிற்று.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top