Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நெஞ்சுட் கலந்தென்னை நேர்நினைத்து நூலிட்டுச்
செஞ்சுடர்சேர் தாற்பரிய தீபத்தாற்-பஞ்சவர்தந்
தேர்ப்பாகன் கீதைச் சிறந்தபொருள் காட்டினா
னேர்ப்பாகு நன்றே யினிது.         18.78E

பஞ்சவர்தம் தேர்ப்பாகன்

பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனுக்குச் சாரதியாய் இருந்த கண்ணன்

என்னை நெஞ்சுள் கலந்து

என்னுடைய மனத்தில் புகுந்து

நேர் நினைத்து நூல் இட்டு

என்னைத்தக்கவனாக எண்ணி இந்நூலை எழுதச் செய்து

செஞ்சுடர் சேர் தாற்பரிய தீபத்தால்

செவ்வையான பொருளோடு கூடிய (ஒளிமிக்க) தாத்பர்யமாகிற விளக்கால்

கீதை சிறந்த பொருள் காட்டினான்

கீதையின் சிறந்த பொருளை வெளிப்படுத்தினான்

நேர்ப்பாகு நன்றே இனிது

சாரதியாக இருந்து என்னை நேராகச் செலுத்தியது நன்றாகவும் இனிதாகவும் உள்ளது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top