Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

சேர்ந்து சிரத்தையினைச் சேரா தசூயையினை
யார்ந்திதனைக் கேட்குநர னானவனுந் – தீர்ந்துதுய
ரற்றே யறிவெய்து மன்புடையோர் தங்கூட்டம்
பெற்றே மகிழும் பெருத்து.          18.71

சிரத்தையினை சேர்ந்து

கேட்பதில் விருப்பத்தோடு கூடியவனாய்

அஸூயிைனை சேராது

பொறாமையில்லாதவனாய் ஆர்ந்து ஓராசார்யனை அடைந்து

இதனைக் கேட்கும் நரன் ஆனவனும்

இந்த ஸாஸ்த்ரத்தைக்கேட்பதை மட்டும் செய்யும் மனிதனும்

துயர் தீர்ந்து

பக்திக்குத் தடையான பாபங்கள் நீங்கப்பெற்று

அற்றே அறிவு எய்தும் அனபுடையோர் தம் கூட்டம்

(மற்ற விஷயங்களில்) பற்றற்று (பகவத் விஷயத்தில் ஈடுபடும்) அறிவை அடைந்த பக்தர்களின் கூட்டங்களை

பெற்றே

அடைந்து

பெருத்து மகிழும்

மிகவும் இன்புறுவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top