Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னை நினைந்தநீ யென்றுமித் துக்கங்க
டன்னிகரி லென்னருளாற் றான்கடத்தி – பின்னிதனை
யசிங்காரத் தாலே யமர்ந்துநீ கேளாயேற்
ருங்காதிங் கேநசித்தி தான்.           18.58

என்னை நினைந்த நீ

என்னிடம் நெஞ்சை வைத்தவனான நீ (முற்கூறியபடி எல்லாக்கர்மங்களையும் செய்தாயானால்)

இத்துர்க்கங்கள்

ஸம்ஸாரத்தில் கட்டிவைக்கும் எல்லாத் தடைகளையும்

தன்னிகரில் என் அருளால்தான்

ஒப்பற்ற என்னுடைய அருளாலே

என்றும் கடத்தி

எப்போதும் தாண்டிவிடுவாய்

பின்

அப்படியல்லாமல்

ஆங்காரத் நானே

எல்லாமறிந்தவன் என்னும் எண்ணத்தாலே

இதனை

நான் சொன்னதை

நீ

நீ

அமர்ந்து கேளாயேல்

நன்கு கேட்காவிட்டால்

இங்கே தாங்காது

இவ்வுலகில் ஸத்தை பெறாமல்

நசித்திதான்

ஆத்மநாசத்தை அடைந்துவிடுவாய்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top