Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கோதறுசீர்ப் புத்தியுடன் கூடித்தன் றிண்மையான்
மீதியலு நெஞ்சை மிகவடக்கித் – தீதமரு
மோசை முதற்பொருள்க ளுள்ளுறவிட் டொன்றிவரும்
மாசை வெறுப்பவையு மற்று.          18.51

கோதறுசீர்புத்தியுடன்கூடி

ஆத்மதத்வவிஷயமான உண்மையறிவோடு கூடியவனாய்

தன திண்மையால்

முற்கூறிய ஸாத்விக த்ருதியால்

மீதியில் நெஞ்சை மிக அடக்கி

பட்டிமேயும் நெஞ்சை விஷயங்களிலிருந்து மீட்டு

தீதமரும் ஓசை முதற்பொருள்கள் உள்ளுறவிட்டு

தாழ்ந்தவையான ஸப்த ஸ்பர்ஸ ரூப ரஸ கந்தங்களாகிற புலன்களை அடியோடு விட்டு

ஒன்றிவரும் ஆசை வெறுப்பு அவையும் அற்று

அவ்விஷயங்களில் ஈடுபாட்டால் வரும்விருப்பையும் வெறுப்பையும்கைவிட்டு

அறிவுதான் தக்க தனியாம் இடத்துச் சார்ந்து

தியானத்திற்குத் தகுந்தபடி தியானவிரோதிகளோடு தொடர்பில்லாததான ஏகாந்தமான இடத்தில் இருப்பவனாய்

சிறிது உண்டு

அளவோடு உண்பவனாய்

ஒக்க உரை காயம் நெஞ்சு உள்ளொடுக்கி

முக்கரணங்கள் என்று சொல்லப்படும் மனோ வாக் காயங்களை ஒருபடிப்பட தியானத்தில் ஈடுபடுத்தியவனாய்

மிக்கமர்ந்தே என்றும் தியானமாம் யோகம் சேர்ந்து

இறுதிவரையில் தினந்தோறும் தியானயோகத்தை அநுஷ்டிப்பவனாய்

எவ்விடத்தும் ஒன்றும் நசை விடுதலுற்று

ஆத்மாதவிர்ந்த விஷயங்களில் ஈடுபடுவதைக் கைவிட்டவனாய்

ஆங்காரம்

தேகமே ஆத்மா என்கிற அபிமாநத்தையும்

வன்மை

அதுவளரக் காரணமான வாஸனையின் பலத்தையும்

அதில்

அது காரணமாக வரும்

செருக்கு

கர்வம்

காமமுடன்

பேராசை

தீங்கார் வெகுளி

தீதுவிளைவிக்கும் கோபம்

தான் சேர் சுற்றம்

தன்னால் கொள்ளப்பட்ட உறவினர் ஆகியவற்றோடு

தேங்காது

சேராமல்

நீந்து மமதை நெகிழ்ந்தே

தன்னதல்லாததைத் தன்னது என்று நினைக்கும் மமகாரத்தைக் கைவிட்டு

நிகழ்சாந்தன்

ஆத்மாநுபவத்தையே எப்போதும் இனிதாகக் கொண்டிருப்பவன்

வந்து வாய்ந்த பிரமத்தனாம்

ஆத்மாவை உள்ளபடி நேரேகண்டு அநுபவிப்பான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top