Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மாமறையோர் மன்னவர்கள் வைசியர்கள் சூத்திரர்க
ளாமனிசர்க் காகி யமர்தருமே – தாமருவுந்
தன்மை யமர்குணத்தின் சார்வுடனே வேறுபடு
நன்மை யமரு நயந்து.         18.41

மாமறையோர் மன்னவர்கள் வைசியர்கள் சூத்திரர்கள் ஆம் மனிசர்க்கு ஆகி

பிராம்மணர் க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் ஆகிய நாலு வர்ணத்தில் பிறந்த மனிதர்களுக்கும் உரியதாய்

தாம் மருவும்தன்மை அமர் குணத்தின் சார்வுடனே

அவரவர்க்குரிய முன் வினையால் உண்டான குணத்தின் பிரிவுகளோடுகூட

அமரும் வேறுபடு நன்மை

(அக்குணங்களுக்குப்) பொருந்தி வெவ்வேறாயிருக்கும் செயல்களும்

நயந்து அமர்தருமே

(சாஸ்திரங்களில்) ஆர்வத்துடன் கூறப்படுகின்றன.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top