Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வண்ணாச் சிரமவகைசேரெஞ் ஞானத்துங்
கண்ணா ருயிரொருமைக் காட்சியாற் – றிண்ணார
வேறறவே நோக்கு மிகுமறிவைச் சத்துவத்திற்
சேற்றிவா மென்றே தெளி.         18.20

வண்ணாச்சிரம வகைசேர் எஞ்ஞானத்தும்

பிராமணன் முதலான வர்ணவகைகளாலும் ஸந்யாஸிகள் முதலான ஆஸ்ரம வகைகளாலும் (குணத்தாலும்) வேறுபட்டிருக்கும் சரீரங்களோடுகூடிய எல்லாச்சேதனரிடத்தும்

கண் ஆர் உயிர் ஒருமைக்காட்சியால்

சரீரத்தை வியாபித்திருக்கும் உயிர்கள் (அறிவுவடிவாயிருக்கையால்) ஒருபடிப்பட்டவை என்று காண்கையாலே

திண் ஆர்

உறுதியாக

வேறு அறவே நோக்கும் மிகும் அறிவை

(சரீரத்தையிட்டு வரும்) வேறுபாடுகள் இல்லாமல் காணும் மேலான அறிவை

சத்துவத்தில்

ஸத்வ குணத்தினால் உண்டாகும்

சேறு அறிவாம் என்றே தெளி

சிறந்த அறிவாகும் என்று புரிந்து கொள்வாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top