Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

கோரமாய்ச் சாத்திரத்திற் கூறத் தவந்தன்னைக்
சேரவே பாரியல்வார் டம்பமுடன் – ஈரமில்லா
வாங்காரங் கூடி யதிகாம ராகங்கள்
தீங்காகுந் திண்மை செறிந்து.         17.5

கோரமாய்

மிகக்கடுமையாய்

சாத்திரத்தில் கூறா

சாஸ்திரங்களில் கூறப்பட்டதான

தவம் தன்னை

தவத்தையும் (யாகத்தையும்)

டம்பமுடன் சேரவே

டம்பத்துடன் கூடியவர்களாய்

ஈரமில்லா ஆங்காரங் கூடி

கருணையில்லாத அஹங்காரத்தோடு கூடியவர்களாய்

அதிகாம ராகங்கள் தீங்காகும் திண்மை செறிந்து

மிகுந்த காம ராகங்களால் தீயதான பலத்தோடு சேர்ந்தவர்களாய்

யார் இயல்வார்

எவர்கள் செய்கிறார்களோ

மற்று அவர்

மிகத்தாழ்ந்த அவர்கள்

உற்ற உடல் பூதங்கள் தன்னை ஒறாநின்றே

(தம் சரீரத்தில்) இருக்கும் ஐந்து பூதங்களையும் வருந்தச் செய்கின்றவர்களாய்

மற்று

அதற்குமேல்

அதனுள் மேவு உயிராய்மன்(னு) எனையும்

அந்த சரீரத்தினுள் இருக்கும் உயிராகப் பொருந்தியிருக்கும் என்னையும்

பற்று அற்று

கருணையில்லாமல்

அறவருந்துவிப்பர்

மிகவும் வருந்தச்செய்பவர்களாய்

ஆசுரமாம் புத்தி மறவர்

(எனது ஆணையை மீறுதலாகிற) ஆஸுரமான உறுதியை உடையவர்கள்

என

என்று

நீ

நீ

நினை

நினைப்பாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top