Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தெய்வமெனுஞ் செல்வந் திகழ்மோக்கத் தாசுரந்தா
னைவகைசார் பந்தத்து நாடுறுப்பா – மிவ்வகையாற்
சேர்ந்துயர்ந்த சீர்ப்பார்த்தா தெய்வமாஞ் சம்பத்தை
நேர்ந்துதித்தாய் சோகியே னீ.           16.5

சீர் பார்த்தா

பெருமைமிக்க குந்தியின் பிள்ளையே!

தெய்வம் எனும் செல்வம்

தேவர்க்குரிய (எனது ஆணையைப் பின் செல்வதாகிற) செல்வம்.

திகழ்மோக்கத்து நாடு உறுப்பாம்

சிறந்ததான மோக்ஷத்தை அடைவதற்கு உறுப்பாகும்

ஆசுரந்தான்

அஸுரர்க்குரிய (எனது ஆணையைப் மீறுவதாகிற) செல்வம்

நைவகை சார் பந்தத்து நாடு உறுப்பாம்

தாழ்ந்த கதிகளில் கட்டுப்படுவதற்கு உறுப்பாகும்

நீ

நீ

இவ்வகையால் சேர்ந்து

பாண்டுவுக்கும் குந்திக்கும் பிள்ளையாகப் பிறந்திருப்பவனாகையால்

உயர்ந்த தெய்வமாம் சம்பத்தை

உயர்ந்ததான தேவர்களுக்குரிய செல்வத்தை

நேர்ந்துதித்தாய்

பெற்றுப் பிறந்திருக்கிறாய்

சோகியேல்

(ஆகையால்) வருந்தாதே.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top