Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்காரம் வன்மை யதன்செருக்குக் காமமுடன்
தீங்கார் குரோதமது சேர்ந்தவவர் – பாங்காகத்
தம்பிறர்க டேகத்துச் சார்ந்தவெனைத் தான்வெறுப்பார்
வெம்பியசூ யைச்சுடரால் வெந்து.          16.17

ஆங்காரம்

(வேறு எவரையும் எதிர்பாராமல் நானே அனைத்தையும் செய்யவல்லேன் என்னும்) அஹங்காரத்தையும்

வன்மை

(அனைத்தையும் ஸாதிப்பதற்கு என் வலிமையே போதுமானது என்னும்) தன் வலிமையையும்

அதன் செருக்கு

இரண்டாலும் உண்டாகும் (எனக்கு இணையானவன் எவனும் இல்லை என்னும்) கர்வத்தையும்

காமமுடன்

(இத்தகைய என்விருப்பத்தாலேயே எல்லாம் நிறைவேறும் என்னும்) காமத்தையும்

தீங்கு ஆர் குரோதம் அது

(எனக்கு இடையூறு செய்யும் அனைவரையும் ஒழித்து விடுவேன் என்னும்) (பிறர்க்குத்) தீங்கு நினைக்கும் கோபத்தையும்

சேர்ந்த அவர்

கொண்டிருக்கும் அந்த ஆஸுரப்பிறவிகள்

தம் பிறர்கள் தேகத்து

தம் உடல்களிலும் பிறர் உடல்களிலும்

பாங்காக சார்ந்த எனைத்தான்

(அனைத்தையும்) நியமிப்பதற்கு உறுப்பாக வியாபித்திருக்கும் என்னைக் குறித்து

வெம்பி அசூயைச் சுடரால் வெந்து

(குயுக்திகளால்) என் இருப்பில் தோஷத்தை ஏறிட்டுக்கொழுந்துவிட்டு எரியும் அசூயையால் எரிக்கப்பெற்று

வெறுப்பார்

(என்னை) வெறுப்பவர்களாய் (முற்கூறிய யாகம் முதலான செயல் களைச் செய்வர்.)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top