Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

துங்கவள வில்லாதே தோற்றஞ்சேர் சிந்தையினைத்
தங்கண் முடிவளவுந் தாமருவி – யங்கமருங்
காமபோ கம்பரமாக் கண்டறுதி மேவுவரே
யேமமிது வல்லதிலை யென்று.         16.11

துங்க அளவில்லாதே தோற்றம் சேர் சிந்தையினை

மிகப்பெரிதாய் அளவற்றதாய் உண்டாகும் கவலையை

தங்கள் முடிவு அளவும்

தங்கள் (கடைசி) முடிவு காலம் வரையில்

தாம் மருவி

தாம் கொண்டவர்களாய்

அங்கு அமரும் காம போகம் பரமா கண்டு

இவ்வுலகில் அநுபவிக்கும் காமபோகத்தையே பெரும்பயனாக நினைத்து

இது அல்லது ஏமம் இலை

இதைக் காட்டிலும் சிறந்த பயன் இல்லை

என்று

என்று

அறுதி மேவுவரே

உறுதி கொள்வார்கள்

Scroll to Top