Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மன்னுகரு மத்து மருவியல் யோகியர்க
டன்னுடம்பின் மேவிவனைச் சார்ந்துணர்வார் – முன்னுணரும்
நெஞ்சமில் லாதார் நிறைவின்றித் தாமுணரா
ரெஞ்ச லறவியன்று மிங்கு.        15.11

மன்னு கருமத்து மருவு இயல் யோகியர்கள்

என்னை ஸரணமடைவதை முன்னிட்டுக்கொண்டு கர்மயோகம் முதலான முயற்சிகளைச் செய்யும் யோகிகள்

தன் உடம்பில் மேவு இவனை

தன் ஸரீரத்தில் இருக்கும் இந்த ஜீவாத்மாவை

சார்ந்து உணர்வார்

யோகமாகிற கண்ணைக் கொண்டு காண்கிறார்கள்

இங்கு இயன்றும்

(என்னை ஸரணமடையாமல்) இவ்வுலகில் முயற்சி செய்த போதிலும்

நிறைவு இன்றி

(என்னை ஸரணமடையாமையாலே) மனஸ்ஸில் பரிஸூத்தி இல்லாமல்

முன் உணரும் நெஞ் ம் இல்லாதார்

ஆத்மாவைக் காணவல்ல நெஞ்சு இல்லாதவர்கள்

எஞ்சல் அற தாம் உணரார்

ஆத்மாவைக் குறைவறத் தாம் காண்பதில்லை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top