Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இங்குடல மேவியம ரிக்குணங்கண் மூன்றினையு(ம்)
மங்கும் வகைகடந்து மன்னினவன் – றங்கு
பிறப்பிறப்பு மூப்புப் பிணிவிடுத்துத் தன்னாஞ்
சிறப்பமுதஞ் சேருஞ் சிறந்து.            14 . 20

இங்கு உடலம் மேவி அமர் இக்குணங்கள் மூன்றினையும்

தன் உடலில் பொருந்தி நிற்கும் இந்த மூன்று குணங்களையும்,

மங்கும் வகை கடந்து

மங்கிப்போகும்படி கடந்து,

மன்னினவன்

ஜ்ஞானமே வடிவான தன் ஆத்மாவைக் காண்பவன்,

தங்கு பிறப்பு இறப்பு மூப்புப் பிணி விடுத்து

தேஹத்தின் இயல்வான பிறப்பு இறப்பு கிழத்தனம் முதலானவற்றால் உண்டான துன்பங்களைக் கைவிட்டு,

தன் ஆம் சிறப்பு அமுதம்

தன்னைத்தானே அனுபவிக்கும் மரணமற்ற சிறந்த நிலையை,

சிறந்து சேரும்

சிறப்பாக அடைவான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top