Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உன்னுடைய விக்கண்ணா லொன்றுமெனைக் காண்பரிதா
மென்னுமது தன்னாலே யானுனக்கு – மன்னியசீர்த் திவ்வியமாங்
கண்டருகேன் சீர்பிறங்கு மென்பெருமை
செவ்வியுறக் காணதனாற் சேர்ந்து.        11.9

உன்னுடைய இக்கண்ணால்

உனது இந்த ப்ராக்ருதமான கண்ணால்,

எனை ஒன்றும் காண்பு அரிதாம்

என்னை ஒரு சிறிதும் காண இயலாது,

என்னுமது தன்னாலே

இக்காரணத்தாலே,

யான்

நான்,

உனக்கு

உனக்கு,

மன்னிய சீர் திவ்வியமாம் கண் தருகேன்

குணம் பொருந்திய அப்ராக்ருதமான கண்ணைத் தருகிறேன்,

அதனால் சேர்ந்து

அக்கண்ணைக்கொண்டு,

சீர் பிறங்கும் என் பெருமை

குணவிபூதிச் சேர்த்தியோடு கூடிய எனது பெருமையை,

செவ்வியுற காண்

நன்கு காண்பாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top