Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நீசொன்ன வண்ண நிகரில் பரமேசா
மாசொன்றா வண்ண மருவியதே – தேசொன்று
மேலா மிறையுருவை மெய்க்காண விச்சிப்பன்
மாலே புருடோத்த மா.    11.4

நிகரில் பரமேசா

ஒப்பற்ற பரமேஶ்வரனே!

புருடோத்தமா மாலே

புருஷோத்தமனான திருமாலே!

நீ சொன்ன வண்ணம்

நீ சொன்னபடியே,

மாசு ஒன்றா வண்ணம் மருவியதே

குறையில்லாதபடி பொருந்தியிருக்கிறது,

தேசு ஒன்றும்

அனைத்தையும் நியமிக்கை முதலான பெருமைகள் பொருந்திய,

மேலாம் இறையுருவை

மேலான இறைவனாகிற உன் உருவத்தை,

மெய் காண இச்சிப்பன்

நேரே காண விரும்புகிறேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top