Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உன்னை யரர்க ளருக்கர்வசு சாத்தியர்கள்
பின்விச்சு வாச்சுவிகள் பேசுமருத் – தன்னபிதுக்
கந்திருவர் யககர் கலந்தசுரர் சித்தரெல்லாம்
வந்துவியந் தேபார்ப்பர் மற்று.        11.23

மற்று

மேலும்

அரர்கள்

(பதினொரு) உருத்திரர்களும்

அருக்கர்

(பன்னிரு) ஆதித்தியர்களும்

வசு

(எட்டு) வஸுக்களும்

சாத்தியர்கள்

ஸாத்யதேவர்களும்

பின் விச்சுவாச்சுவிகள்

அடுத்துவரும் விஶ்வேதேவர்களும், அஶ்விநீதேவர்களும்

பேசு மருத்து

(நாற்பத்தொன்பதாகப்) பேசப்படும் மருத்துக்களும்

அன்னபிது

தேவர்களோடு ஒத்ததன்மையுடைய பித்ருக்களும்

கந்திருவர்

கந்தர்வர்களும்

யக்கர்

யக்ஷர்களும்

கலந்தசுரர்

இவர்களோடு கலந்திருக்கும் அஸுரர்களும்

சித்தர்

ஸித்தர்களும்

எல்லாம் வந்து

ஆகிய இவர்கள் அனைவரும் (இங்கு) வந்து

வியந்தே

வியப்புற்றவர்களாய்

உன்னை பார்ப்பர்

உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top