Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஓங்குவிசும் பொண்புவியி னுள்ளிதுவு மெத்திசையு
மாங்குயர்வாய் நின்னொருவ னானிறைத்த – பாங்குடனே
யற்புதமாய் நீள்கொடிதா யாருருக்கண் டெவ்வுலகு
நிற்பதிலை தானடுங்கு நின்று.       11.21

ஓஙகு விசும்பு ஒண்புவியினுள் இதுவும்

உயர்ந்துள்ள ஆகாசம் முதலான மேலுலகங்களுக்கும், ஒளி பொருந்திய பூமி முதலான கீழுலகங்களுக்கும் நடுவே உள்ள இந்த இடைவெளியும்,

எத்திசையும்

எல்லா திக்குகளும் (ஆகிய),

ஆங்கு உயர்வாய் நின் ஒருவனால் நிறைத்த பாங்குடனே

அனைத்தும் சிறப்பாக உன் ஒருவனாலேயே வ்யாபிக்கப் பெற்றிருக்கும் பெருமையோடு,

அற்புதமாய்

ஆஶ்சர்யமானதாய்,

நீள்கொடிதாய்

மிகவும் கடுமையான ஒளியுடையதாய்,

ஆர் உருக்கண்டு

நிறைந்துள்ள உன் விஶ்வரூபத்தைக்கண்டு,

எவ்வுலகும்

மூவகைப்பட்ட ஜனங்களும்,

நிற்பது இலை

தம் வசத்தில் நிற்பதில்லை,

தான் நின்று நடுங்கும்

தாம் எப்போதுமே நடுங்குவர்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top