Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆய்வறிவு சேர்பரமா மக்கரநீ யாங்கனைத்துஞ்
சாய்வறவே மேலாய்த் தரிப்பவன் நீ – வீய்வறவே
நிற்பவன் நீ நிற்குமறங் காப்பான் நீ நித்தனா
நற்புருட னீயறிவ னான்.       11.19

ஆய்வறிவு சேர் பரமாம் அக்கரம்

(உபநிஷத்துக்களில்) அறியத்தக்கதான மேலான அக்ஷரமாக ஓதப்படுபவன்,

நீ

நீயே,

ஆங்கு அனைத்தும்

இவ்வுலகிலுள்ள எல்லாப் பொருளையும்,

சாய்வு அறவே மேலாய் தரிப்பவன்

ஸ்வரூப நாசம் இல்லாதபடி மேலான ஆதாரமாயிருப்பவன்,

நீ

நீயே,

வீய்வு அறவே நிற்பவன்

(எவ்வகையிலும்) அழிவில்லாமல் நிற்பவன்,

நீ

நீயே,

நிற்கும் அறம் காப்பான்

நித்யமான வைதிக தர்மத்துக்கு ரக்ஷகன்,

நீ

நீயே,

நித்தனாம் நற்புருடன்

(உபநிஷத்துக்களில்) பழையோனான பரமபுருஷனாக ஓதப்படுபவன்,

நீ

நீயே,

நான் அறிவன்

(இவ்வண்ணமாக) நான் அறிகிறேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top