Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மூவுலகும் பேறெனினு முன்னேன் கொலையதனிற்
பாவுதரைக் காகப் பகைப்பனோ – மேவுசினத்
தந்தன் புதல்வர்களை யாங்கமருட் கொன்றெங்கட்
கெந்தவுகப் புண்டா மினி.   1.28

மூவுலகும் பேறு எனினும்

மூவுலகமும் பலனாகக் கிடைத்தாலும்

கொலையதனில்

(உறவினரைக்) கொல்வதை

உன்னேன்

நினைக்கவும் மாட்டேன்

பாவுதரைக்காக

கால்பாவும் இந்த பூமிக்காக

பகைப்பனோ

(உறவினரைப்) பகைத்துக் கொள்வேனோ?

மேவு சினத்து அந்தன் புதல்வர்களை

சினங்கொண்ட திருதராஷ்டிரபுத்திரர்களை,

ஆங்கு அமருள் கொன்று

போரில் கொன்று

எங்கட்கு

எங்களுக்கு

இனி எந்த உகப்பு உண்டாம்

இனிமேல் எந்த மகிழ்ச்சி உண்டாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top