Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பொல்லாத வந்தன் புதலவனுக்குப் போர் முயல
வெல்லாரும் வந்திங் கெதிர் நின்றே – வில்லாண்மை 
யேவருடன் காட்டுவதென் றேவும் படைமுனையில் 
யாவரையுங் காண்பனினி யான்.    1.19

யான்

நான்

பொல்லாத அந்தன் புதல்வனுக்கு

திருதராஷ்டிரனுடைய தீயபுத்திரனுக்காக

போர் முயல

போர் புரிய

எல்லாரும் இங்கு வந்து

அனைவரும் இங்கு வந்து

எதிர் நின்றே

(நமக்கு) எதிரே நின்று

ஏவும் படைமுனையில்

(ஸேனைகளை) ஏவும் போர்முனையில்

வில்லாண்மை

(என்) வில்திறமையை

ஏவருடன் காட்டுவது என்று

எவர்களுடன் காட்டுவது என்று

யாவரையும்

(பீஷ்மர் துரோணர் முதலான) அனைவரையும்

இனி

(நீ தேரை நிறுத்தியவுடன்)

காண்பன்

காணக்கடவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top