Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வில்லாண்மைக் காசிமனும் வென்றிச் சிகண்டியுடன் 
மல்லார்பாஞ் சாலனவன் மைந்தனுமற் – றெல்லாருஞ் 
சாத்திகியுஞ் சௌபத் திரனுந் தனித்தனியே 
வாய்த்ததஞ்சங் கூதினார் மற்று.   1.16

வில் ஆண்மை காசிமனும்

வில்லாளியான காசியரசனும்

வென்றி சிகண்டியுடன்

வெற்றிபெறும் சிகண்டியோடு

மல் ஆர் பாஞ்சாலனவன் மைந்தனும்

மற்போரில் வல்ல பாஞ்சாலன் மைந்தனான திருஷ்டத்யும்னனும்

சாத்திகியும்

ஸாத்யகியும்

சௌபத்திரனும்

சுபத்திரையின் பிள்ளையான அபிமன்யுவும்

மற்று எல்லாரும்

(பாண்டவசேனைச்சாலைவரான) மற்றுமுள்ள அனைவரும்

னித்தனியே

தனியாக

வாய்த்த தம் சங்கு

தமக்கென்று ஏற்பட்ட சங்கங்களை

ஊதினார்

ஒலித்தனர்

அக்கடிய பேரரவ மந்தன் சுதரிதஞ்  சிக்கெனத் தீரச் சிதைத்ததே தொக்கெழுந்து  வான்றிசையு மண்ணகமு மற்றும் பலவிடமுந்  தான்றிகழ வோங்கித் தழைத்து

அக்கடிய பேர் அரவம்

அந்த வலிமைமிக்க பேரொலி

தொக்கு எழுந்து

கிளர்ந்து எழுந்து

வான்திசையும்

ஆகாயத்திலும்

மண்ணகமும்

பூமியிலும்

மற்றும் பல இடமும்

மற்றும் பல இடங்களிலும்

தான் திகழ ஓங்கித் தழைத்து

தானே விளங்கும்படியாக ஓங்கி நிலைத்துநின்று

அந்தன் சுதர் இதயம்

குருடனான திருதராஷ்டிரனின் பிள்ளைகளின் இருதயங்களை

சிக்கென தீர சிதைத்தது

உறுதியாகவும் முறியவும் பிளந்தது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top