Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மாதவனு மாமாது மாறனும்வண் பூதூர்வாழ்
போதமுனி யுந்தந்தம் பொன்னடிகண் – மீதருள
வுச்சிமேற் கொண்டே யுயர்கீதை மெய்ப்பொருளை
நச்சிமேற் கொண்டுரைப்பன் னான்.   0.2

மாதவனும்

லக்ஷ்மீநாதனும்

மா மாதும்

பிராட்டியும்

மாறனும்

நம்மாழ்வாரும்

வண் பூதூர் வாழ் போத முனியும்

வண்மைமிக்க பெரும்பூதூரில் வாழும் கருணை வடிவெடுத்த இராமாநுச முனிவரும்

தம் தம் பொன் அடிகள்

தந்தாமுடைய அழகிய திருவடிகளை

மீது அருள

(தலை) மீது வைக்க

உச்சி மேல் கொண்டே

(அவற்றை) என் தலையுச்சியில் கொண்டே

உயர் கீதை மெய் பொருளை

உயர்ந்த கீதையின் உண்மைப்பொருளை

நான்

(பெரியவாச்சான்பிள்ளையின் அருள்நோக்குப்பெற்ற) நான்

நச்சி

விரும்பி

மேற்கொண்டு உரைப்பன்

விவரிப்பேனாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top