Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தூயகரு மங்களினாற் சத்வமிக வுண்டாக்கி
யேயவுணர் வாலுயிரி னீறறிந்து – மாயனிடை
முத்தியுறுஞ் சிந்தை முயலாசை முன்பணியாற்
பத்தியுறல் கீதைப் பயன்.           18.78C

தூய கருமங்களினால்

புண்யகருமங்களால்

சத்வம் மிக உண்டாக்கி

ஸத்வ குணத்தை மிகவும் வளரும்படி செய்து

ஏய உணர்வால்

அதனால் உண்டான ஜ்ஞானத்தால்

உயிரின் ஈறு அறிந்து

ஆத்மாவுக்கு முடிவான பயனைத் தெரிந்துகொண்டு

மாயனிடை

எம்பெருமானிடம்

முத்தி உறும் சிந்தை

மோக்ஷத்தை விரும்பும் மனத்தோடும்

முன் பணியால் முயல் ஆசை

அவன் திருமுன்பே கைங்கர்யம் செய்வதில் விருப்பத்தோடும்

பத்தி உறல்

அவனிடம் அன்பு செலுத்துதல்

கீதைப் பயன்

கீதையைப் படித்ததின் பயனாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top