Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

பகவத்கீதை வெண்பா
(பதினெட்டாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக்கூறும் பாசுரம்)

தன்மைக் கருமந் தகுகுணத்தின் றூய்மையுட
னன்மை பயில்சார நன்கறியத் – தொன்மைப்
பரமனருள் கீதைப் பதினெட்டா மோத்தாஞ்
சரமமுரைத் தோர்ந்ததிது தான்.          18.78A

தன்மைக்கருமம்

மூவகைப் பரித்யாகத்துடன் செய்யப்படும் கர்மயோகம் மோக்ஷோபாயமாயிருக்கும் என்பதையும்

தகுகுணத்தின் தூய்மையுடன்

ஸத்வ குணம் தூயதாகையாலே கைக்கொள்ளத்தக்கது என்பதையும்

நன்மை பயில் சாரம்

கீதா ஸாஸ்த்ரத்தின் ஸாரமான பக்தி ப்ரபத்திகளே நன்மையளிப்பவை என்பதையும்

நன்கு அறிய

நன்றாக அறியும்படியாக

தொன்மைப் பரமன் அருள் கீதை பதினெட்டாம் ஓத்தாம் சரமம்

பழையோனான கிருஷ்ண பரமாத்மா அருளிய கீதையின் பதினெட்டாவது கடைசி அத்தியாயம்

உரைத்து ஓர்ந்தது இது தான்

உரைத்து நிச்சயித்தது இதுவேயாகும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top