Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

காயத்தால் வாக்காற் கருது மனந்தன்னால்
வாயத்தான் செய்ய மருவிமுயல் – நேயத்தால்
நல்வினைக்குந் தீவினைக்கு நாட்டி லிவையைந்துஞ்
செல்வினையி லேதுவாஞ் சேர்ந்து.      18.15

காயத்தால்

உடலாலும்

வாக்கால்

வாக்கினாலும்

கருதும் மனம் தன்னால்

நினைக்கும் மனத்தாலும்

நேயத்தால் வாய தான் செய்ய மருவி முயல்

அன்போடு பொருத்தமாகத் தான் செய்வதற்கு விரும்பி ஈடுபடும்

நல்வினைக்கும்

ஸாஸ்த்ரத்தில் ஸித்திக்கும் செயல்களுக்கும்

தீவினைக்கும்

சாஸ்த்ரத்திற்கு முரணான செயல்களுக்கும்

(1) நிற்க நிலையாகும் உடல்

ஜீவாத்மா தரிக்கையாலே நிலையாயிருக்கும் உடல்

(2) நேர்ந்த உயிராம் கர்த்தா

அவ்வுடலிலே பரவியிருக்கும் ஜீவாத்மாவாகிற செயல்படுபவன்

(3) வற்கு

அவனுக்கு

நிழல் செய்

உதவிபுரியும்

கரணம் மற்றவைதான்

மனத்தோடு கூடிய கர்மேந்திரியமான ஐந்து

(4) ஒற்கமிலா சேட்டை பல

ஓய்வில்லாத ஐந்து செயல்களைப் புரியும் ப்ராணன் என்னும் வாயு

(5) கன்மத்துக் கூட்டமாவதாகவே கொள்

தான் செயல்புரியும் போது இவையனைத்தையும் கருவிகளாகக் கொண்ட

பஞ்சமமாம் தெய்வ இறை

ஐந்தாவது முக்கிய காரணமான பரமாத்மா

இவை ஐந்தும்

இந்த ஐந்தும்

நாட்டில்

இவ்வுலகில்

செல்வினையில்

நடைபெறும் கர்மங்களுக்கு

சேர்ந்து ஏதுவாம்

ஒன்று சேர்ந்து காரணமாகின்றன.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top