Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தான் விருப்ப மின்றிச்செய் தானந் தவமோமம்
வான்விரும்பத் தேற வழியாகா – வான்விருப்பாக்
காயத்தி னன்காகாக் காரணத்தாற் றனசத்தாய்
மாயத் துறுவிக்கு மற்று.       17.29

தான் விருப்பமின்றிச்செய்

தனக்கு ஒரு விருப்பம் (ஸ்ரத்தை) இல்லாமல் செய்யப்படும்

தானம் தவம் ஓமம்

தானமும் தவமும் ஹோமமும்

விருப்பத்து வான் ஏற வழி யாகா

விரும்பப்படும் பரமபதத்திற்குச் செல்வதற்கு வழியாக மாட்டா

வான் விருப்பா

பெரிய விருப்பத்துடன்

காயத்தின்

உடலைப்பற்றி இருப்பதனால் அமையும் பயன்களுக்கும்

நன்கு ஆகா

அடியோடு காரணமாகமாட்டா

காரணத்தால்

இக்காரணத்தால்

தான் அஸத்தாய்

இக்கருமங்கள் தான் 'அஸத்' என்று சொல்லப்படுபவையாய்

மற்று மாயத்து உறுவிக்கும்

(முற்கூறிய போகமோக்ஷங்களைக் காட்டிலும்) மிகவும் வேறுபட்ட ஸம்ஸாரத்திலேயே உழல வைக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top