Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஐயனவ னுக்காங் கறிய வுரைசெய்தான்
செய்ய கருமச் சிரத்தைதான் – மெய்யமருந்
தன்மையான் முக்குணத்தின் சார்வாகு மூவகையாம்
பன்மைநீ கேளாய் பயின்று.         17.2

ஐயன்

ஸ்வாமியான கண்ணன்

அவனுக்கு

அந்த அர்ஜுனனுக்கு

ஆங்கு

அவ்விடத்தில்

அறிய

(அவன்) புரிந்துகொள்ளும்படி

உரைசெய்தான்

(பின்வருமாறு) கேள்விக்கு பதிலுரைத்தான்

செய்ய கருமச் சிரத்தைதான்

(சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கையாகிற) செம்மையையுடைய கர்மங்களின் சிரத்தை

மெய் அமரும் தன்மையால்

தம் தேஹத்தின் இயல்வோடு பொருந்திய அந்தந்த விஷயங்களில் ருசியினால்

மூவகையாம் முக்குணத்தின் சார்வு ஆகும்

ஸாத்விகமானது ராஜஸமானது தாமஸமானது என்று முக்குணத்தையிட்டு மூன்று வகைப்பட்டதாகும்

பன்மை

அந்த மூன்றுவகையின் தன்மையை

நீ பயின்று கேளாய்

நீ கவனமாகக் கேட்பாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top