Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மீது முதலாய் மிகுசாகை கீழாக
வோது முலகா முயரரசைப்-போதுந்
தளிர்கள் மறையாகத் தானுணர்வா னந்த
வொளிகொண் மறையுணர்ந்தா னுற்று.       15.1

மீதுமுதலாய்

மேலே வேர் உடையதாய்

மிகுசாகை கீழாக

பரவியுள்ள கிளைகளைக் கீழே உடையதாய்

போதும் தளிர்கள் மறையாக

(பூர்வபாகத்திலுள்ள) வேத வாக்யங்களைத் தளிர்க்கும் இலைகளாக உடையதாக

ஓதும்

வேதங்களில் ஓதப்படும்

உலகாம் உயர் அரசை

ப்ரவாஹரூபமாயிருக்கையால்) அழியாதிருப்பதான ஸம்ஸாரமாகிற அரசமரத்தை

தான் உணர்வான்

அறிகின்ற மனிதன்

அந்த ஒளிகொள் மறை உற்று உணர்ந்தான்

மூலப்ரமாணமாய் நித்யமாயிருக்கை முதலான சிறப்புகளை உடையதான வேதத்தை நன்கு அறிந்தவனாவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top