Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னைப் புறம்போகா யோகமாம் பத்தியினான்
மன்னப் பயின்று மருவுமவன் – றன்னமரப்
பேசுகுணஞ் செற்றுப் பிரமமாந் தன்மையினை
மாசில்குணஞ் சேர்ந்திடுமே மற்று.            14 . 26

புறம்போகா யோகமாம் பத்தியினால்

வேறு தெய்வங்களையும் பயன்களையும் கருத்தில் கொள்ளாத பக்தியோகத்தினால்,

என்னை

ஸர்வேஶ்வரனான என்னை,

மன்ன பயின்று மருவுமவன்

நன்றாக உபாஸித்து ஆராதிப்பவன்,

தன் அமரப் பேசு குணம் செற்று

தன் ஆத்மாவை அனுபவிக்கலாம்படி முற்கூறிய ஸத்வம் முதலான மூன்று குணங்களையும் கடந்து,

மற்று

அதற்குமேலே,

மாசில் குணம் பிரமமாம் தன்மையினையே சேர்ந்திடும்

பாபமற்றிருக்கை முதலான எட்டு குணங்களையுடைய பரம்பொருளின் தன்மையையே அடைந்துவிடுவான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top