Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

இங்குலகில் யோனிகளா மெத்திறத்து மூர்த்திகளா
யங்குதயஞ் செய்யு மவைதமக்குப் – பங்கமிலா
விந்தப் பிரமமே யோனி கருவளிக்கு
மந்தப் பிதா நானே யாங்கு.           14 . 4

இங்கு உலகில் யோனிகளாம்

இவ்வுலகிலுள்ள தேவர் முதலான பிறவிகளில் சேர்ந்த

எத்திறத்து மூர்த்திகளாய்

எந்தவகையான ஶரீரங்களாகவும்

அங்கு உதயம் செய்யும் அவை தமக்கு

ஆங்காங்கு பிறக்கின்ற அந்த ஶரீரங்களுக்கு

பங்கமிலா இந்த பிரமமே

(சேதனர்களோடு கூடிய கார்யநிலையிலுள்ள) அழிவில்லாத இந்த மூலப்ரக்ருதியே

யோனி

காரணம்

ஆங்கு

அவை விஷயத்தில்

கரு அளிக்கும் அந்த பிதா

(அவரவர் கர்மாநுகுணமாகச்) சேதனவர்க்கமாகிற கர்ப்பத்தைச் சேர்க்கும் தந்தை

நானே

நானேயாவேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top