Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மானமுட னேடம்பம் வன்கொலையின் மாறுநிலை
யானபொறை செவ்வை யமர்குருவின் – பானணுகல்
சுத்தியமர் வுற்ற துணிவுடைமை சூழ்மனத்தைச்
சித்தி யளவுஞ் செறுப்பு.      13.7

மானமுடனே டம்பம் வன்கொலையின் மாறுநிலை

உயர்ந்தோரை அவமதித்தல், புகழுக்காக அறஞ்செய்தல், முக்கரணங்களாலும் பிறரைத்துன்புறுத்தல், ஆகியவையில்லாமலிருக்கை

ஆனபொறை

பிறரால் துன்புறுத்தப்பட்ட போதிலும் மனவேறுபாடு அடையாமை

செவ்வை

பிறர் விஷயத்தில் முக்கரணங்களாலும் ஒருபடிப்பட்டிருக்கை

அமர்குருவின்பால் நணுகல்

(ஆத்மஜ்ஞானத்தை உபதேசிக்கும்) நல்ல ஆசார்யனுக்குப் பணிவிடைபுரிதல்

சுத்தி

(ஆத்மஜ்ஞானத்திற்கும் அதன் ஸாதனத்திற்கும் உறுப்பான முக்கரணசுத்தி

அமர்வுற்ற துணிவுடைமை

(சாஸ்த்ரம் கூறும் அர்த்தத்தில் மிக்க உறுதியுடனிருக்கை

சூழ்மனத்தைச் சித்தியளவுஞ் செறுப்பு

(ஆத்ம ஸவரூபம் தவிர்ந்த விஷயங்களில்) பட்டிமேயும மனத்தை ஆத்மஸாக்ஷாத்காரம் பெறும் வரையில் அடக்கிவைத்தல்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top