Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என் கொடிய ரூப மிதுகண் டுளங்கலங்கா
துன்கொடிய துன்ப மொழிந்திடுநீ – நன்குடைய
நெஞ்சாற் பயந்துரந்து நீயந்த வென்வடிவை
யெஞ்சாது காணா யினி.   11.50

என் கொடிய ரூபம் இது கண்டு

என்னுடைய பயங்கரமான இந்த விஶ்வரூபத்தை கண்டு

உளம் கலங்காது

நெஞ்சம் கலக்கம் அடையாமல்

உன் கொடிய துன்பம் ஒழிந்திடு நீ

நீ உனது மிகுதியான துக்கம் நீங்கப் பெறுவாய்.

நன்கு உடைய நெஞ்சால்

உகப்பையுடைய நெஞ்சாலே

பயம் துரந்து

பயத்தைவிட்டு

நீ அந்த என் வடிவை

ஏற்கனவே நீ கண்ட எனது அழகிய திருமேனியை

இனி எஞ்சாது காணாய்

இனி முழுவதும் காணாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top