Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்பாற் றொழில்செய்தே யெற்பரனா யென்னலனாய்
வன்பாருஞ் சங்கமற வைரந்தான் – றன்பாலற்
றெவ்வகைய பூதத்து மேலுமவன் பாண்டவனே
யிவ்வகைவந் தென்னடையு மிங்கு.        11.56

பாண்டவனே!

பாண்டு புத்திரனே!

என்பால் தொழில் செய்தே

என்னுடைய ஆராதனமாகக் கர்மங்களைச் செய்பவனாய்

எற்பரனாய்

என்னையே தன் செயல்களுக்கு மேலான உத்தேஶ்யமாகக் கொண்டவனாய்

என்னலனாய்

என்னிடம் பக்தியில்லாமல் உயிர் தரிக்கமாட்டாமையாலே என்னையே பயனாகக் கொண்டவனாய் அவற்றைச் செய்பவனாய்

வன்பு ஆரும் சங்கமற

மற்ற பயன்களில் செல்லும் பற்றைப் பொறாது விலக்கியவனாய்

எவ்வகைய பூதத்தும் வைரம் தான் தன்பாலற்று

(காரணமில்லாமையாலே) எல்லா ஜீவராசிகளிடமும் விரோதத்தைத் தன்னிடம் கொள்ளாதவனாய்

ஏலும் அவன் இங்கு

வாழ்கின்றவன் இவ்வுலகத்தில்

இவ்வகை வந்து

இவ்வண்ணமாக என்னிடம் ஈடுபட்டு

என் அடையும்

என்னை அடைவான்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top