Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

அத்தியா தேது மனன்னியமா யென்னமர்ந்த
பத்தியா லாவன் பரந்தபனே! – யித்திறத்தா
லாங்குணர்ந்து கண்டே யடைதற் கருகனே
பாங்குணர்ந்து மெய்யே பயின்று.        11.55

பரந்தபனே!

எதிரிகளைத் தவிக்கச்செயயும் அர்ஜுனா!

ஏதும் அத்தியாது

வேறு எப்பலனையும் விரும்பாமையால்

அனன்னியமாய்

அனன்யம் எனப்படுவதாய,

என் அமர்ந்த பத்தியால்

என் விஷயமான பக்தியாலே

இத்திறத்தால்

இவ்வண்ணமாக

பாங்கு உணர்ந்து

உள்ளபடி உணர்ந்து

மெய்யே பயின்று

பொய் கலவாமல் பழகி

ஆங்கு உணர்ந்து

சாத்திரத்தால் அறிந்து

கண்டே

நேரில் கண்டு

அடைதற்கு அருகனே ஆவன்

அடைவதற்குத் தக்கவனாவேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top