Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

வான்றடவி மேல்விளங்கி மன்னுபல வண்ணமாய்
ஆன்றமுக மங்காந் தவிரொளிசேர்ந் – தேன்றவிழித்
தோற்றுமுனைக் கண்டே துளங்கியுளந் திண்மையுட
னாற்றலுறே னாதா வமர்ந்து.      11.25

நாதா

ஸ்வாமியான விஷ்ணுவே!

மேல்வான் தடவி

பரமபதத்தைத் தொடுகின்றவனாய்

விளங்கி

ஒளி வீசுகின்றவனாய்

மன்னு பல வண்ணமாய்

நிலைநின்ற பல நிறங்களையுடையவனாய்

ஆன்ற முகம் அங்காந்து

ஆ என்று விரியத் திறந்த வாயையுடையவனாய்

அவிர் ஒளி சேர்ந்து ஏன்ற விழி தோற்றும்

ஒளிவீசும் பரந்த கண்களுடன் காட்சியளிப்பவனான

உனை கண்டு

உன்னை பார்த்து

உளம் துளங்கி

பயந்த நெஞ்சையுடையவனாய்

திண்மையுடன்

தேஹதாரணத்துடன்

அமர்நது

இந்தரியங்கள் ஒருமுகப்பட்டு

ஆற்றல் உறேன்

தரிக்க இயலாதவனாயிருக்கிறேன்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top