Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆதலா லிங்கெழுநீ யாங்குப் பெறுபுகழை
யேதலரை வென்றே யெழிலரசின் – மீதமர்வாய்
என்னாலே முன்னே யிவர்கள் கொலையுண்டார்
மன்னா நீ யேதுவா மற்று.   11.34

ஆதலால் இங்கு நீ எழு

முற்கூறிய காரணத்தால் இப்போர்க்களத்தில் நீ போர்புரிய எழுவாயாக

ஏதலரை வென்றே

எதிரிகளை வெற்றிகொண்டு

ஆங்கு புகழை பெறு

அப்போர்க்களத்தில் புகழ்பெறுவாய்

எழில் அரசின்மீது அமர்வாய்

செழிப்புள்ள அரசை அனுபவிப்பாய்

இவர்கள்

எதிர்த்தலையிலுள்ள வீரர்கள்

என்னாலே முன்னே கொலையுண்டார்

என்னால் கொலைபுரியத்தக்கவர்களாக நிச்சயிக்கப்பட்டார்கள்

மன்னா! நீ

(இரு கையாலும் அம்பெய்யவல்ல) அரசனே! நீ

மற்று ஏதுவா

ஓர் கருவியாக ஆவாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top