Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

நுண்ணேர்கொ ளக்கரமா நூலுரைக்கு மப்பொருளை 
யெண்ணோர் பரமகதி யென்றுரைப்பர் – நண்ணியது
மீளா ரெனக்கதுதான் மேலா யொளிசிறந்து
மாளா விருப்பிடமா மற்று.            8.20

நுண் நேர் கொள் அக்கரமா

நுண்ணியதாகையாலே 'அவ்யக்தம்' என்றும் 'அக்ஷரம்' என்றும்

நூல் உரைக்கும் அப்பொருளை

ஸாஸ்த்ரங்கள் கூறும் அந்த முக்தஸ்வரூபத்தை

எண்ணோர்

(அதை) உபாஸிப்பவர்கள்

பரமகதி என்று உரைப்பர்

மேலான ப்ராப்யம் என்று கூறுவர்

அது நண்ணி மீளார்

அதை அடைந்தபின் ( அவர்கள் ) வேறு பயனை அடையார்

மற்று

மேலும்

மேலா ஒளி அதுதான்

மேலான ஒளியாயிருக்கும் அந்த முக்தஸ்வரூபமானது

எனக்கு

எனக்கு

மாளா இருப்பிடமாம்

அழியாத நியமன ஸ்தானமாகும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top