Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆதலா லெக்காலு மங்ஙனெனை நின்றுநினை 
தீதறுசீர் வெஞ்சமத்தைச் செய்குதிநீ – காதலா
லென்பான் மனம்புத்தி யேய்ந்தா னெனையடையுந்
தன்பாலோர் சங்கையறச் சார்ந்து.      8.7

ஆதலால்

முற்கூறிய காரணத்தால்

எக்காலும்

(மரணமடையும் வரை) எல்லாக்காலத்திலும்

அங்ஙன்

முற்கூறிய மூன்று வகைகளில் ஒரு விதமாக

எனை

என்னை

நின்று நினை

நிலையாக நினைப்பாயாக

நீ

நீ

தீது அறு சீர் வெம் சமத்தை

(க்ஷத்ரியனுக்கு) குற்றமற்றதாய் பெருமையையுடைய கடும்போரை

செய்குதி

செய்வாயாக

காதலால்

அன்போடுகூட

என்பால்

என்னிடம்

மனம் புத்தி ஏய்ந்தான்

மனத்தையும் அறிவையும் செலுத்தியவன்

தன்பால் ஓர் சங்கை அற சார்ந்து

தான் பலன் பெறுவதுபற்றி ஓர் ஐயமும் இல்லாமல் ஸாதனத்தை அநுஷ்டித்து

எனை அடையும்

(தான் விரும்பிய வகையில்) என்னை அடைவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top