Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

உற்றிவர்க ளெல்லா முதாரரே ஞானியெனு(ம்)
மற்றிவனென் றன்னுயிரா வாய்ந்தறிவ—னற்றமற
வென்று மவனென்னை யேலும் பரகதியா
நின்றுணர்வு செய்யு(ம்) நிகழ்ந்து.        7.18

உற்ற இவர்கள் எல்லாம் உதாரரே

என்னுடைய பக்தர்களான இவர்கள் அனைவரும் வள்ளல்களே

மற்று ஞானி எனும் இவன்

(இவர்களில்) விலக்ஷணனான ஞானி என்கிற நான்காமவன்

என்தன் உயிரா வாய்ந்து அறிவன்

எனக்கு தாரகனாகப் பொருந்தியிருப்பவன் என நான் அறுதியிடுவேன்

என்றும் அவன் என்னை

என்றும் அவன் என்னை

நற்றம் அற ஏலும் பரகதியா

வேறு நற்கதியில்லாதபடி பொருந்திய ஒப்பற்ற ப்ராப்யமாக

நிகழ்ந்து

கொண்டு

நின்று உணர்வு செய்யும்

என்னை நிலையாக விரும்புவன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top