Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

மானிடவர் பல்லா யிரத்தொருவன் மன்னுலகந்
தானியல்வா னாங்கவர்க டங்களினு-மேனிகழ்ந்தே
யென்னை முழுதறிவா னெங்கேனு மாங்கொருவன்
றன்னையறி வானரிது தான்.     7.3

மானிடவர்

ஶாஸ்த்ராதிகாரிகளுக்குள்ளே

பல்லாயிரத்து ஒருவன்

ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனே

மன்னு உலகம் தான் இயல்வான்

நிலையான மோக்ஷலோகத்திற்குச் செல்ல முயல்வான்

ஆங்கு அவர்கள் தங்களிலும்

அப்படி முயல்கின்றவர்களிலும்

மேல் நிகழ்ந்தே

அதற்கும் மேலே சென்று

என்னை முழுது அறிவான்

என்னையே ப்ராப்யமாகவும் அறிபவன்

எங்கேனும் ஆங்கு ஒருவன்

ஆயிரக்கணக்கானவரில் ஒருவனே

(அவர்களிலும் ) தன்னை

(உபாயமாகவுமிருக்கும்) என இயல்வை

அறிவான்

அறிகிறவன்

அரிது தான்

இல்லவேயில்லை

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top