Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

என்னமரு நெஞ்சனாய் யோகத் தியல்வுற்றே
நின்னமரு மென்பற்றாய் நின்றநீ-யு(மு)ன்னினைவு(யு)
முண்மயக்கற் றொன்றொழியா தென்னை யுணர்வண்ணந்
திண்மையுறக் கேள்பார்த்தா தீர்ந்து    7.1

பார்த்தா

குந்தியின் பிள்ளையே!

என் அமரும் நெஞ்சனாய்

என்னிடத்திலே மிகப்பொருந்திய நெஞ்சை உடையவனாய்

நின் அமரும் என்பற்றாய்

உன் ஸ்வரூப மும் என்னையே ஆதாரமாகப் பெற்றவனாய்

யோகத்து இயல்வுற்றே நின்ற நீ

(என் விஷயமான) பக்தியோகத்தைத் தொடங்கி நிற்கும் நீ

உன் நினைவும்

(என்னைப் பற்றிய) உன் அறிவும்,

உள் மயக்கு அற்று

ஐயம் இல் லாமல்

என்னை உணர் வண்ணம்

என்னை அறியும்படியாக

தீர்ந்து

கவனமாக

திண்மை உற கேள்

நன்றாகக் கேட்பாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top