Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

முன்னுரைத்த யோகிகளுண்முற்றுமென் பான்மனஞ்சேர்
தன்னுறைப்பான் மேல்விரும்பித் தானென்னை -மன்னுநலம்
பெற்றே பணிந்தான் பிறங்கியுயர் யோகியென
வற்றேநான் கொள்வ னுகந்து.           6.43

முன்னுரைத்த யோகிகளுள்

முன் உரைத்த யோகிகளைக் காட்டிலும்

முற்றும்

மற்ற எல்லாரைக் காட்டிலும்

என்பால் சேர் மனம்

என்னிடம் ஈடுபட்டிருக்கும் மனத்தினால்

தன் உறைப்பால்

( என்னை அடைவதில்) தான் வேகத்தை உடையவனாயிருப்பதால்

மேல் விரும்பி

மிகவும் விருப்புற்று

தான் மன்னும் நலம் பெற்றே என்னை பணிந்தான்

தான் ( என்னிடம் ) நிலையான பக்தியை அடைந்து என்னை உபாஸிப்பவன்

பிறங்கி உயர் யோகி என

மிகவிளங்கி உயர்ந்திருக்கும் யோகி என்று

நான் உகந்து கொள்வன்

நான் உகப்புடன் எண்ணுவேன் ('அற்றே' என்பது உகப்பைக் காட்டும் சொல்) 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top