Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

தவம்புரிந்தார் தன்மை யுணர்ந்தார் கருமத் 
துவந்தியன்றார் தங்களிலும் யோகி – யவன் சிறந்து
மிக்குணர்ந்தா னென்றுணரப் பட்டான் விசயா நீ
தக்குயர்ந்த யோகமே சார்.           6.42

தவம் புரிந்தார் 

கேவல தபஸ்ஸைச் செய்பவர்கள் 

தன்மை உணர்ந்தார்

(அசேதனப்பொருள்களின ) தன்மையை அறிபவர்கள்

கருமத்து உவந்து இயன்றார்

கேவல கர்மங்களை உகப்புடன் செய்பவர்கள்

(ஆகிய) தங்களிலும்

இவர்கள் அனைவரிலும்

யோகி அவன்

யோகி யானவன்

சிறந்து

சிறப்புற்றவனாய்

மிக்கு உணர்ந்தான் என்று உணரப் பட்டான்

சிறந்த பயனுக்கு ஸாதனத்தை அறிந்தவன் என்று எண்ணப்படுகிறான்

விசயா

அர்ஜுனா!

நீ

நீ

தக்கு

தகுதிபெற்று

உயர்ந்த

சிறப்புற்ற

யோகமே

யோகத்தையே

சார்

அநுஷ்டிப்பாயாக 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top