Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/movc/bhagavadgitanew.mo.vc/wp-includes/functions.php on line 6131

பகவத் கீதை வெண்பா

ஆங்கேதன் முன்பிறவி யானயோ கத்துணர்வைப் 
பாங்கேலும் புத்தியினிற் பற்றியே – யீங்கமர்ந்த
பின்னு மதின்முயற்றி பெற்றியன்று பேறதனின்
மன்னுமவ னாகுமே மற்று.        6.39

ஆங்கே

அப்பிறப்பில்

தன் முன்பிறவி ஆன யோகத்து உணர்வை

தன்னுடைய முன்பிறவியிலிருந்த யோக விஷயமான அவ்வறிவை

பாங்கு ஏலும் புத்தியினில் பற்றியே

பவ்யமான நெஞ்சில் அடைந்து

ஈங்கு அமர்ந்த பின்னும்

(அவ்வறிவை ) இப்பிறப்பில் அடைந்த பின்பும்

அதில் முயற்றி பெற்று இயன்று

யோகம் நன்கு நிறைவேறுவதற்கு முயற்சியை அடைந்து செயல்புரிந்து

மற்று பேறு அதனின் மன்னுமவன் ஆகுமே

கடைசியில் அந்த யோகத்தில நிலை நிற்பவனாகவே ஆகிவிடுவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top